Education Certificate Camp | கல்வி சான்றிதழ் சிறப்பு முகாம்
Education Certificate Camp
புயல் பாதித்த மாவட்டங்களில் சேதம் அடைந்த கல்வி சான்றிதழ்களை கட்டணமின்றி பெற சிறப்பு முகாம்கள் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மழை வெள்ள பாதிப்பால் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ், வாரிசு சான்றிதழ், கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்கள் சேதம் அடைந்திருக்கலாம். அவற்றை மீண்டும் பெறும் வகையில், மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படும். பொது மக்களும் முகாம்களில் பங்கேற்று கட்டணமின்றி சான்றிதழ்கள் பெறலாம்.
நாளை சிறப்பு முகாம் – காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் புயல் பாதித்த வருவாய் வட்டங்களில் சிறப்பு முகாம்கள் திங்கட்கிழமையும் (டிசம்பர் 11ம் தேதி), சென்னையில் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் செவ்வாய்கிழமையும் (டிசம்பர் 12ம் தேதியும் நடைபெறும்).
சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடம், நேரம் குறித்த அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக அறிவிக்கப்படும். சிறப்பு முகாம்களில் பொதுமக்களின் வசதிக்கென இணைய சேவை மையங்களும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.