Eco Club Activities Fund in Tamil | சுற்றுச்சூழல் மன்றம் நிதி பயன்பாடு விவரம்
Eco Club Activities Fund in Tamil
சுற்றுச்சூழல் மன்றம் சார்பாக பல்வேறு செயல்பாடுகள் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான நிதி பள்ளி கல்வித்துறையால் சுற்றுச்சூழல் மன்றம் நிதி பயன்பாடு விவரம் என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது. அதன்படி ஆண்டுத்தோறும் பள்ளிகல்வித்துறை ரூ.2500 பள்ளிகளுக்கு நிதியாக ஒதுக்கப்படுகிறது.
பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஆண்டு செலவுப்படி தொகையாக ரூ.500 வழங்கப்படுகிறது. (குறிப்பு – முக்கிய தினங்களில் பயிற்சிகள் வரபோக செலவாக பயன்படுத்த வேண்டும்.
Read Also: Environmental All Articles – Click Here
பசுமைப்படை பெயர் பலகை (மண்வெட்டி, கடப்பாரை, பூவாளி, போன்றவை வாங்குதல்) ரூ.500 ஒதுக்கப்படுகிறது.
முக்கிய தினங்களில் மாணவர்களுக்கு இனிப்பு, டீ, சாக்லேட் வழங்குதல் 5 தினங்கள் 100/1 ரூ.500 ஒதுக்கப்படுகிறது.
முக்கிய தினங்களில் துண்டு பிரசாரம், பேனர் செய்தல் ரூ.500 ஒதுக்கப்படுகிறது.
முக்கிய தினங்களில் புகைப்படம் எடுப்பதற்கு ரூ.500 நிதியாக வழங்கப்படுகிறது. (தற்போது, இந்த நிதியை வைத்து எப்படி தலைமை ஆசிரியர்கள் புகைப்படம் எடுப்பது என்பது கேள்விக்குறி).
மேலும், அரிமா சங்கம் ரோட்டரி சங்கம், வங்கிகள், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், அரசு துறைகள், தன்னார்வலர்கள் மூலம் ஒருங்கிணைத்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.