You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Eco Club Activities at Schools - தேசிய பசுமை படை / சுற்றுச்சூழல் மன்றம் செயல்பாடுகள்

Eco Club Activities at Schools in Tamil

Eco Club Activities at Schools - தேசிய பசுமை படை / சுற்றுச்சூழல் மன்றம் செயல்பாடுகள்

Eco Club Activities at Schools

இந்த பதிவில் தேசிய பசுமை படை Eco Club / சுற்றுச்சூழல் மன்றம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து காணலாம்

  • தேசிய பசுமை படை அல்லது சுற்றுச்சூழல் மன்றம் இரண்டும் ஒரே வகையான அமைப்பே, பெயர்தான் வித்தியாசம்
  • தேசிய பசுமை படைக்கு மத்திய அரசு நிதி உதவி – சுற்றுச்சூழல் மன்றத்திற்கு மாநில அரசு நிதி உதவி அளிக்கிறது
  • தேசிய பசுமை படை அல்லது சுற்றுச்சூழல் மன்றங்களின் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 40 முதல் 50 வரை மட்டுமே இருக்க வேண்டும்.
  • 6ம் வகுப்பு, 7ம் வகுப்பு, 8ம் வகுப்பு , 9ம் வகுப்பு , 11ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே அங்கத்தினர்களாக சேர்க்க வேண்டும்.
  • நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம், இவற்றின் மூலம் புவி மாசு அடைவதை விழிப்புணர்ச்சி மூலமாக மக்களை தட்டி எழுப்ப ஐந்து குழுக்களை உருவாக்கி ஒவ்வொரு மேலாண்மையை ஒப்படைத்தல் வேண்டும்.
  • ஒவ்வொரு குழுவிலும் 8 முதல் 10 மாணவர்கள் உறுப்பினர்களாக இருக்கலாம்.
  • ஒவ்வொரு குழுவிற்கும் நீலக்குழு, பச்சைக்குழு, ஆரஞ்ச குழு, மஞ்சள் குழு, பழுப்புக் குழு என பெயரிடுதல் வேண்டும்

Eco Club - சுற்றுச்சூழல் மன்ற குழுக்கள் செயல்பாடுகள் என்ன?

Eco Club நீலக்குழு - நீர் மேலாண்மை  

  • நீர் மாசு அடைவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பையும், மக்கள் அடையும் துன்பங்களையும் மாணவர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
  • உலக தண்ணீர் தினம் (மார்ச் 22) உலக ஈர நாள் பாதுகாப்பு தினம் இயற்ககை வளங்கள் நாள் (அக்டோபர் 5) போன்ற நாட்களில் பேரணிகள், மனிதசங்கிலி, தெரு நாடகங்கள், துண்டு பிரசுரம், போன்றவை மூலமாக நீரின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
  • பள்ளியிலும், வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை உண்டாக்கி மழை நீர் தேக்க தொட்டிகள் வெட்டச் செய்தல்
  • நீரை கிக்கனமாக செலவிட விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
  • கழிப்பிடங்கள் போன்ற இடங்களில் உருவாகும் நீரை விணாக்காமல், மறுசூழற்சி செய்து பயன்படுத்த மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
  • நிலத்தடி நீரை, கழிவு நீர் கலக்காமல் பாதுகாத்தல்
  • தோல் பதனீடு, ரசாயன தொழிற்சாலைகளின் கழிவுகளை ஆறுகள் மூலம் வெளியேற்றி நிலத்தடி நீர் பாழடைவது விழிப்பணர்வு மூலம் தடுத்தல்

Eco Club பச்சைக்குழு – நில மேலாண்மை

  • நிலம் மாசடைந்து, நிலத்தின் தன்மை கெட்டு, மண் அரிப்பு, மண்ணின் தரம் குன்றுதல், செயற்கை விவசாய முறைகளின் பாதிப்பால் மண்வளம் கெட்டு, நாட்டு மக்கள் பல வகைகளில் சுற்றுச்சூழல் பாதிப்படைவதை விழிப்புணர்வு மூலம் மக்களுக்கு எடுத்துரைத்தல்
  • பூமிதினம், உலக வன நாள், வன மகோத்சவம் போன்ற நாட்களில் பேரணிகள், மனித சங்கிலி, தெரு நாடகங்கள், வீடு வீடாய் சென்று பிரசாரம் செய்தல், துண்டு பிரசாரம் போன்றவைகள் மூலமாக நிலத்தை மாசு அடையாமல் காப்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தல்
  • வீடுகள், பள்ளிகள், கோயில்கள், அரசு நிலங்கள், தரிசு - புறம்போக்கு நிலங்களில் மரங்கள் நடுதல் பணி.
  • பள்ளிகளில் மரக்கன்று உற்பத்தி செய்தல்
  • விவசாயிகளுக்கு மரக்கன்று உற்பத்தி செய்தல்
  • விவசாயிகளுக்கு செயற்கை உரங்களை விளக்குதல்
  • இயற்கை உரங்களாகிய மண்புழு உரம், பசுந்தாள் உரம், பசுங்காவ்யம், இலை தழை உரங்கள் ஆகியவற்றை முன்மாதிாியாக உற்பத்தி செய்து காட்டல்
  • மூலிகை பண்ணை, தோட்டப்பண்ணை மாதிரி அமைத்தல்

Eco Club ஆரஞ்சு குழு – காற்று மேலாண்மை

  • காற்று மாசு அடைவதால் மக்கள் அடையும் சுகக்கேடுகளையும், சுற்றுச்சூழல் பாதிப்பையும் மாணவர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
  • சர்வதேச ஓசோன் தினம், இயற்கை பாதுகாப்பு தினம், தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம் போன்ற நாட்களில் பேரணிகள், மனிதசங்கிலி, தெருநாடகங்கள், துண்டு பிரசுரங்கள் போன்றவை மூலமாக காற்று மாசு அடைவது குறித்தும், அதுகுறித்து மக்கள் அடையும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
  • வாகனங்கள், தொழிற்சாலைகளில் உண்டாகும் புகையினால், சுற்றுச்சூழல் கெடுதலை, எப்படி பராமரிப்பு செய்வது குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்துதல்
  • காற்று மாசடைவதால், வெப்பமடைவதால் ஓசோன் ஓட்டை, துருவப் பிரதேசத்தில் பனி ஆறு பெருகுதல், கடல் மட்டம் உயருதல் கடற்கரை நகரங்கள் அழிவு- சுனாமி – நிலநடுக்கம் – எரிமலை கொந்தளிப்பு – போன்றவற்றை விளக்கி காற்று மாசடையாத பணிகளை மேற்கொள்ள – மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
  • போகி, தீபாவளி, பண்டிகை மற்றைய காலங்களில் எரித்தலை குறைத்தல்
  • வாகனங்களை குறைவாக பயன்படுத்துதல்

Eco Club மஞ்சள் குழு – ஆற்றல் மேலாண்மை குழு

  • மனித வள மேலாண்மை இயற்கை வள மேலாண்மையை பெருக்கி சுற்றுப்புற சூழல் வளத்தை காத்து நாட்டு மக்கள் நலம்பெற விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
  • உலக ஆற்றல் தினம், இயற்கை பாதுகாப்பு தினம், தேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள் போன்ற நாட்களில் தவறால் ஆற்றல் மேலாண்மையால் உலகத்திற்கு ஏற்படும் அபாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணிகள், மனிதசங்கிலி, தெருநாடகங்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
  • அனல்மின் நிலையங்களில் நிலக்கரி உபயோகித்து கார்பன் வாயுவினால் ஆகாயம் கெட்டு சுற்றுச்சூழல் பாதிப்பு – சூர்ய ஆற்றல் சக்தி காற்றாலைகள் சக்தி மூலமாக கார்பனை குறைத்தல்
  • நாட்டு மக்கள் குண்டு பல்புகள் உபயோகித்து குறைத்து சுருள் பல்புகள் உபயோகம் செய்வதன் மூலம் வெப்ப அளவை குறைத்தல்
  • தெருவீதிகளிலும், வீடுகளிலும் அலுவலகங்களிலும் வீணாக மின்விளக்குகள் எரித்தலை குறைத்தல் மின்விசிறிகள் காற்று குளிர்விப்பான், குளிர்சாதன பெட்டி, தொலைக்காட்சி பயன்பாட்டை குறைத்தல், மற்றும் சுற்றுச்சூழல் நட்பு சாதனங்களை பயன்படுத்துதல்
  • சூர்ய அடுப்பு, எரிசான வாயு பயன்பாடு விழிப்புணர்வு

Eco Club பழுப்புக்குழு - கழிவு மேலாண்மை

  • குப்பை கூளங்களிலும், பிளாஸ்டிக் உபயோகத்தால் சுற்றுச்சூழலும் பாதிப்படைந்து மக்கள் அடையும், கஷ்டங்களை விழிப்புணர்வு மூலம் மக்கள் உணரச் செய்தல்
  • தேசிய மாசு கட்டுப்பாடு தினம், உலக சுற்றுச்சூழல் தினம், உலக பாலைவன தடுப்பு நாள் போன்ற தினங்களில் பேரணிகள், மனிதசங்கிலி, தெரு நாடகங்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் மாணவர்கள் மற்றும் மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
  • பள்ளிகளிலும், வீடுகளிலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக கையாளும் முறைகளை உருவாக்க விழிப்புணர்வு பிரசாரம் செய்தல்
  • பாலிதின் குப்பைகளை தனியாக பிரித்து எடுத்து அதனை விலைக்கு விற்று பயனபெற செய்தல்
  • பள்ளிகளில் மக்கும் குப்பைகளை பயன்படுத்தி பசுந்தாள் உரம் செய்வித்து விவசாயிகளுக்கு முன்மாதிரியாக இருக்கச் செய்தல்
  • பாலிதின் உபயோகத்தால் ஏற்படும் சுககேடுகளை விளக்கி பாலிதின் உபயோகத்தை குறைக்க விழிப்புணர்ச்சி செயல்பாடுகள்
  • கடற்கரையிலும், ஆறுகளிலும் பாலிதின் இல்லா குப்பை இல்லா செயல்பாடுகளை செய்தல்