Teacher upset on government for refusing Dearness Allowance
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,
இந்த பட்ஜெட் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக இருப்பதாக ஆசிரியர் கழகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த அரசு ஏமாற்றத்தையே மிகப்பெரிய பரிசாக ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு வழங்கியுள்ளதாக அவர்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை என ஆசிரியர் கழகத்தினர் ஆதங்கப்பட்டுள்ளனர். அகவிலைப்படி இல்லை என்றும் அரசு கைவிரித்துவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆசிரியர்கள், அரசு ஊழியா்களின் நியாயமான, முக்கியமான எதிர்பார்ப்புகள் அனைத்து இந்த பட்ஜெட் நிராகரித்துள்ளதாக ஆசிரியர் கழகம் கருத்து தெரிவித்துள்ளது.
அகவிலைப்படி அடுத்த ஆண்டு வரைக்கும் தள்ளிப்போடுவது எந்த வகையில் நியாயம் இல்லை என குமுறுகின்றனர்.
மேலும் அவர்கள், தமிழக அரசு விதி 110 ஐ பயன்படுத்தி இரண்டு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறு கோரிக்கை வைக்கின்றனர்.
அதாவது, இந்தாண்டு ஜூலை முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் உடனடியாக அறிவிக்க வேண்டும் என கழகத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
மகளிருக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதங்கள் நீட்டிப்பு செய்ததை கழகத்தினர் வரவேற்றுள்ளனர்.