நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணிமாறுதலாகி பெற்று, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக கடந்த பிப்ரவரி மாதம் பொறுப்பு ஏற்றுக்கொண்டு பணியாற்ற தொடங்கினார்.
இதுகுறித்து கல்வித்துறை வட்டாரங்கள் கூறும்போது, இவர் தனியார் பள்ளியிடம் உரிமம் புதுப்பிக்க ரூ. ஒரு லட்சம் வரை லஞ்சமாக கேட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளிக்கப்பட்டதின் பேரில், கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று மாலை முதன்மை கல்வி அலுவலகத்தில் திடீர் சோதனை செய்தனர், ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்காமல் சோதனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே, முதன்மை கல்வி அலுவலரை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ. ஒரு லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். போலீசார் தொடர்ந்து விடிய, விடிய சோதனை செய்து வந்தனர். இவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா மற்றும் அவரது உதவியாளர் பாலன் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.