You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

வட்டார கல்வி அலுவலர் மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு - Do you Know the Block Educational Officer Counselling Date

Eco Club Activities Fund in Tamil|

2021 – 2022ம் கல்வி ஆண்டிற்கான வட்டார கல்வி அலுவலர் மாறுதல் கலந்தாய்வு டிசம்பர் 28, 2021ம் ஆண்டு அன்று நடக்கும் என்று தொடக்க கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

  • தற்போது பணிபுரியும் ஒன்றியங்களில் 30.12.2021 நிலவரப்படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் வட்டார கல்வி அலுவலர்கள் கட்டாயமாக பொதுமாறுதல் கலந்தாய்வு கலந்துகொள்ள வேண்டும்.
  • 30.11.2021ம் ஆண்டு நிலவரப்படி இரண்டு ஆண்டுகள் பணி முடிக்காதவர்களும் விருப்பத்தின் அடிப்படையில் மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்.
  • 2021-2022ம் கல்வி ஆண்டில் ஓய்வுபெறும் வட்டார கல்வி அலுவலர்கள் தற்போதைய ஒன்றியத்தில் 30.11.2021 நிலவரப்படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தாலும் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
  • வட்டார கல்வி அலுவலர்களுக்கு முதலில் மாவட்டத்திற்குள்ளான மாறுதல் கலந்தாய்வும் பின்னர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வும் நடைபெறும்.
  • நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல், பதவி உயர்வு மூலம் வட்டார கல்வி அலுவலர்களாக நியமனம் பெற்றவர்கள் தாங்கள் கடைசியாக நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணிபுரிந்த ஒன்றியத்தை மாறுதல் கலந்தாய்வில் தேர்வுசெய்ய கூடாது.
  • மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் வட்டார கல்வி அலுவலர்கள் தற்போது பணிபுரியும் ஒன்றியத்தை மாறுதல் கலந்தாய்வில் மீளவும் தேர்வு செய்யக்கூடாது.
  • மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டவர்கள் முன்னுரிமை அவர்கள் முதன் முதலில் வட்டார கல்வி அலுவலர் பதவியில் பணியில் ேசர்ந்த தேதியின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும். வட்டார கல்வி அலுவலர் பதவியில் பணியில் சேர்ந்த தேதி ஒன்றாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் தற்போது பணிபுரியம் ஒன்றியத்தில் பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் முன்னுரிமை செய்யப்படும்.
  • தற்போது பணிபுரியும் ஒன்றியங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் வட்டார கல்வி அலுவலர்கள் மாறுதல் கலந்தாய்வுக்கு தனிதனியாக விண்ணப்பிக்க தேவையில்லை என தெரிவிக்கப்படுகிறது.
  • ஒன்றியத்தில் இரண்டு ஆண்டுகள் பணி முடிக்காதவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் இணைப்பில் உள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 22.12.2021க்குள் சாாந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

பொதுமாறுதல் கலந்தாய்வு மற்றும் வட்டார கல்வி அலுவலர் பணியிடத்திற்கான பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை

  1. மாறுதல் விண்ணப்பம் சமர்ப்பித்தல் (ஒன்றியத்தில் இரண்டு ஆண்டுகள் பணி முடிக்காதவர்கள்)  - 21.12.2021 மற்றும் 22.12.2021
  2. மாறுதல் கலந்தாய்விற்கான வட்டார கல்வி அலுவலர்களின் முன்னுரிமை பட்டியல் வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்விற்கான நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் தகுதிவாய்ந்தோர் பட்டியல் மற்றும் காலிப்பணியிடம் விவரம் ஆகியவை எமிஸ் இணையதளத்தில் வெளியிடுதல் - 23.12. 2021
  3. மாறுதல் முன்னுரிமை பட்டியல், தகுதிவாய்ந்தோர் பட்டியல் மற்றும் காலிபணியிடத்தில் திருத்தம் மற்றும் முறையீடுகள் ஏதும் இருப்பின் சரி செய்தல் – 24.12.2021
  4. இறுதி மாறுதல் முன்னுரிமை பட்டியல், தகுதிவாய்ந்தோர் பட்டியல் மற்றும் காலிபணியிடம் விவரம் வெளியிடுதல் – 27.12.2021
  5. வட்டார கல்வி அலுவலர்கள் மாறுதல் (மாவட்டத்திற்குள்) -  28.12.2021 முற்பகல்
  6. வட்டார கல்வி அலுவலர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) 28.12.2021 பிற்பகல்
  7. நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிலிருந்து வட்டார கல்வி அலுவலராக பதவி உயர்வு கலந்தாய்வு - 29.12.2021 முற்பகல்
Block Educational Officer counselling form