பள்ளி தலைமை ஆசிரியர்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வி இயக்குனர் ச கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
அரையாண்டு தேர்வு விடுமுறை டிசம்பர் 23ம் தேதி தொடங்கி, ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் தலைமை ஆசிரியர்கள் அரையாண்டு தேர்வு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும், மேலும், ஏற்கனவே விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என நிலையான ஆணை உள்ளதாக கூறி, பள்ளி கல்வித்துறைக்கு மனு அளித்திருந்தனர். குறிப்பாக, சில தலைமை ஆசிரியர்கள் தேர்வு விடுமுறையின்போது, பள்ளிக்கு வர வேண்டும் என்ற காரணத்தால், சிறப்பு வகுப்புகள் நடத்த வற்புறுத்துவாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நிலையில், பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆங்கில நாளிதழிக்கு அளித்த பேட்டியில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, தெரிவித்துள்ளார்.