தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் உயர்தரக் கல்வி அளிக்கப்படும் என ஏழு உறுதிமொழிகளில் கல்விக்கான பிரிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவை என்னவென்று பார்ப்போம்,
- கல்வி (1.9%ல் லிருந்து 6%) மற்றும் சுகாதாரத்திற்காக (0.75%ல் லிருந்து 2%) மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து செலவிடப்படும் நிதியளவு மூன்று மடங்கு உயர்த்தப்படும்.
- கற்றல் வெளிப்பாட்டுக்கான அளவீட்டில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெறச் செய்தல் (தற்போது 17வது இடம்)
- பள்ளி கல்வியில் மாணவர்களின் ஒட்டுமொத்த இடைநிற்றல் விகிதத்தை 16 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காட்டிற்கும் கீழாக குறைத்தல்
- அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் முன்மாதிரி பள்ளிகளையும், மருத்துவமனை அமைத்தல்
- மருத்துவர்கள், செவிலியர்கள் துணை மருத்தவர்கள் மற்றும் பிற தொழிற்கல்வி பட்டதாரிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குதல்.