திமுக தலைவரும் தமிழக அரசின் எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியாதவது:
நியாயமான கோரிக்கைகளுக்காக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள், முதலமைச்சர் திரு. பழனிசாமியின் கோரிக்கையை ஏற்றுப் பணிக்குத் திரும்பிய பிறகு, அவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுப்பது வஞ்சகம் இல்லையா? ஆசிரியர்கள் – அரசு ஊழியர்கள் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தாமல் அவர்கள் மீதான நடவடிக்கைகளை உடனடியாக அ.தி.மு.க. அரசு ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர்கள் – அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் தி.மு.கழக அரசு அமைந்தவுடன் நிறைவேற்றப்படும். இது உறுதி! இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.