அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
25.4 C
Tamil Nadu
Thursday, October 5, 2023

Directorate of Government Examinations Role | அரசு தேர்வுகள் இயக்ககம் செயல்பாடு

Directorate of Government Examinations Role | அரசு தேர்வுகள் இயக்ககம் செயல்பாடு

மேல்நிலை மற்றும் இடைநிலை பொது தேர்வுகள்

அரசு தேர்வுகள் இயக்ககம் ஒவ்வொரு ஆண்டும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தி கற்றல் அடைவுகளை துல்லியமாக அளவிட்டு, தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. இதன் மூலம், மாணவர்கள் அடுத்தடுத்து கல்வி நிலை நோக்கி நகர்கின்றனர். மேலும், 10, 11 மற்றும் 12ம் வகுப்பின் மதிப்பெண் சான்றிதழ் வழங்கி, தேர்ச்சியை உறுதி செய்கிறது.

Read Also: TN 12th Tatkal Fee Details In Tamil

எட்டாம் வகுப்பு பொது தேர்வு

இந்த எட்டாம் வகுப்பு பொதுதேர்வு என்பது, குறைந்த பட்ச கல்வி தகுதியை வழங்குவதற்காகவும், அடிப்படை நிலையில் பதவி உயர்வுக்காகவும், ஒட்டுநர் உரிமம் பெறுவதற்காகவும் எட்டாம் வகுப்பு பொது தேர்வு Eighth Standard Public Examination (ESLC) நடத்தப்படுகிறது.

அரசு தொழில்நுட்ப தேர்வு

வேலை வாய்ப்பிற்காகவும், குறைந்தபட்ச தொழில் நுட்ப கல்வித் தகுதியை வழங்குவதற்காகவும் அரசு தொழில்நுட்ப தேர்வு – Technical Education நடத்தப்படுகிறது. இத்தேர்வு இரண்டு நிலையாக நடத்தப்படுகிறது ஒன்று கீழ் நிலை, மற்றொன்று மேல்நிலையாக நடத்தப்படுகிறது. கீழ் நிலை தேர்விற்கு குறைந்தபட்ச தகுதியாக எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேல்நிலை தேர்வு எழுத பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தொடக்க கல்வி பட்டயத்தேர்வு

தொடக்க, அல்லது இடை நிலை ஆசிரியர்கள் ஆக விரும்புவர்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்று, அதாவது 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகளில் பாடம் எடுக்க முடியும். இதன் பயிற்சி காலம் இரண்டு ஆண்டு காலம்.

Directorate of Government Examinations Role
Directorate of Government Examinations Role

சிறப்பு துணை தேர்வு நடத்துதல்

10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்கள் சிலர் பல்வேறு காரணங்களால் சில பாடங்களில் தோல்வி அடைகின்றனர். மாணவர்கள் எதிர்கால கல்வி நலன் கருதி, தோல்வி அடைந்த பாடங்களில் தேர்ச்சி பெறுவதற்காக மீண்டும் சிறப்பு துணை தேர்வு Special Supplementary Examination நடத்தப்படுகிறது. உதாரணமாக, பத்தாம் வகுப்பு துணை தேர்வில் தேர்ச்சி பெற்றால் 11ம் வகுப்பு செல்ல முடியும், 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் கல்லூரியில் சேர முடியும்.

உதவித்தொகை தேர்வுகள்

ஊரக மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு ஊரக மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வை (TRUST examination) அரசு தேர்வுகள் இயக்கம் நடத்துகிறது.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படும் தேசிய அளவிலான திறனறி தேர்வுகளை NTSE – National Talent Search Examination (முதல் நிலை) தமிழகத்தில் அரசு தேர்வுகள் இயக்கம் நடத்தி வருகிறது.

மேலும் அரசு தேர்வுகள் இயக்ககத்தால், தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவி தொகை National Means cum Merit Scholarship தேர்வு நடத்தப்படுகிறது,

மறுபிரதி சான்றிதழ் வழங்குதல்

அரசு தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களை தவறிவிட்ட தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல் மற்றும் மறுபிரதி மதிப்பெண் சான்றிதழ் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

புலப்பெயர்ச்சி சான்றிதழ் வழங்குதல்

அரசு தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்படும் 10, 12 வகுப்புகளுக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பிற மாநிலங்களில் மேற்படிப்பை தொடர விரும்பும் மாணவர்களுக்கு புலப்பெயர்ச்சி சான்றிதழ்கள் Migration Certificate வழங்கப்படுகின்றன.

12ம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் மறுமதிப்பீடு

12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், தங்களுக்கு அளிக்கப்பட்ட மதிப்பெண்கள் சாிதானா என்பதை சரிபார்த்து கொள்ள வசதியை அவர்களுடைய விருப்பத்தின் பேரில் விடைத்தாள்கள் பெற அனுமதி வழங்கப்படுகிறது. விடைத்தாள்கள் ஸ்கேனுடு நகல்கள் பெற விரும்பினால் மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது.

மதிப்பெண் சான்றிதழ் உண்மைதன்மை சரிபாா்த்தல்

மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மை தன்மை வழங்கும் பணி தற்போது கணினி வழி மற்றும் மதிப்பெண் பதிவேடுகளுடன் ஒப்பிட்டுப்பார்த்து மேற்கொள்ளப்படுகிறது. தற்போது ஆன்லைன் மூலமாக மதிப்பெண் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகள் செயல்படுத்த என்ஐசி மூலம் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மேற்கொள்ளப்படுகிறது.

Related Articles

Latest Posts