சென்னை : உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி 2021 -22ம் கல்வியாண்டிற்கான டிப்ளமோ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பினை இன்று வெளியிட்டார்.
அதன்படி, டிப்ளமோ படிக்க விரும்பும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் https://tngptcmadurai.com/ என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணபிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகளில் 18, 120 இடங்கள் உள்ளன. இந்த கல்லூரிகளில் சேர மாணவர்கள் விண்ணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இல்லாமல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.