District Education Officer Arrest |மாவட்ட கல்வி அலுவலர் கைது
District Education Officer Arrest
திண்டுக்கல்லில், 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, மாவட்ட கல்வி அலுவலரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் இருந்து, முத்தழகுபட்டி பள்ளிக்கு ஆசிரியை ஒருவர், பணி மாறுதலில் சென்றார். அவர், ஆறு மாதமாக சம்பளம் பெறாதது குறித்து, மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணி, 57, என்பவரிடம் புகார் அளித்தார்.அதற்கு அவர், '5,000 ரூபாய் லஞ்சமாக கொடுத்தால், உங்களுக்கு வரவேண்டிய, 3.75 லட்சம் ரூபாய் சம்பள பில்லை, உடனே பாஸ் செய்கிறேன்' என்றார்.
லஞ்ச ஒழிப்பு போலீசில், ஆசிரியை புகார் செய்தார். DEO., நேற்று லஞ்சம் வாங்கியபோது, அவரை கையும், களவுமாக போலீசார் கைது செய்தனர்.