பள்ளிக்கே வராமல் மாற்று நபரை வகுப்பு எடுக்க அனுப்பிய அரசு பள்ளி ஆசிரியரை இடைநீக்கம் செய்து கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தொடக்க கல்வி இயக்குனராக நரேஷ் பொறுப்பேற்ற பின், விதிமுறைகள் படி பள்ளி ஆண்டாய்வு, பள்ளி ஆய்வுக்கு செய்யாத வட்டார கல்வி அலுவலர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறார். மேலும், முறையாக ஆய்வில் ஈடுபடாத வட்டார கல்வி அலுவலர்களுக்கு கடந்த மாதம் விளக்கம் கேட்டு குறிப்பாணையும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், பெரும்பாலான வட்டார கல்வி அலுவலர்கள் பள்ளி ஆய்வு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, ஆய்வு பணி தருமபுரி மாவட்டத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் கல்வி அலுவலர்கள் கரிமங்கலம் வட்டாரம், ராமியாம்பட்டி பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளியில் ஆய்வு செய்தனர். அப்போது, கே பாலாஜி என்ற இடைநிலை ஆசிரியரை பள்ளிக்கே செல்லாமல், டிமிக்கி கொடுத்து வீட்டிலேயே இருந்துள்ளார். இவா், இவருக்கு பதிலாக மற்றொருவரை பாடம் நடத்த சம்பளம் கொடுத்து பள்ளிக்கு அனுப்பியதாக தெரிகிறது. இது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவரை கல்வி அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்துள்ளனர். அதே சமயத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் என்ன செய்து கொண்டிருந்தார் என்று தகவல் வெளியாகவில்லை.