You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

CUET Application Last Date 2023 | க்யூட் நுழைவுத்தேர்வு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

Typing exam apply Tamil 2023

CUET Application Last Date 2023 | க்யூட் நுழைவுத்தேர்வு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

CUET Application Last Date 2023

இளங்கலை பட்டப்படிப்புகளில் சேர 2023ஆம் ஆண்டுக்கான பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பம் செயல்முறை நேற்றிரவு முதல் தொடங்கியது. ஆன்லைன் தேர்வுக்கான விண்ணப்பங்களை மார்ச் 12ம் ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என்று யுஜிசி தலைவர் ஜெகதேஷ் குமார் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர 2022-2023ஆம் கல்வியாண்டு முதல் பொதுநுழைவு தேர்வு (சி.யு.இ.டி) கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமை மூலம் கணினி வழியில் நடத்தப்படும் இந்த தேர்வானது தமிழ், இந்தி உட்பட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டங்களுக்கான மாணவர் சேர்க்கை 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் அல்லாமல், பொது நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக்குழு கடந்த ஆண்டு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Read Also: நுழைவுத் தேர்வு வெற்றி பெற குறிப்புகள்

2023ஆம் கல்வியாண்டில் மத்திய பல்கலைக்கழகங்கள், 11 தன்னாட்சி பல்கலைக்கழகங்களில், 19 தனியார் பல்கலைக்கழங்களில் உள்ளிட்ட 90 பல்கலைக்கழங்களில் 54,555 பாடப்பிரிவுகளில் சேர ஆன்லைன் பொது நுழைவுத்தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ளது. தேர்வில் மாணவர்களின் விடைகளுக்கு ஏற்ப, 0 முதல் 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்த தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பல்கலைக்கழங்களில் சேர்த்துகொள்ளப்படுவா்.

அந்த வகையில் 2023ஆம் ஆண்டு பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை நேற்று இரவு முதல் தொடங்கியது. இணையத்தில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மார்ச் 12ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களாக நுழைவுத்தேர்வு நடக்க உள்ளது. மே மாதம் இரண்டாவது வாரத்தில் பங்கு பெற விண்ணப்பித்துள்ள ஒவ்வொரு மாணவருக்கும் தேர்வுக்கான அனுமதிசீட்டு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் எம் ஜெகதேஷ் குமார் கூறும்போது, பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 2023 ஆண்டு ஜூலை மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, புதிய கல்வி அமர்வு ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும். கடந்த ஆண்டு போலவே, 2023ஆம் ஆண்டுக்கான பொது நுழைவுத்தேர்வு தமிழ், ஆங்கிலம் உள்பட 13 மொழிகளில் நடைபெறும். மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தளமான http://cuet.samarth.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் முறையில் மட்டுமே தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.