Cuddalore district education news | கடலூர் மாவட்ட கல்வித்துறையில் வசூல் வேட்டை
Cuddalore district education news
கடலூர் மாவட்ட கல்வித்துறையில் கடலூர், விருத்தாசலம் ஆகிய இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இவைகள் மூலமாக பள்ளிகளில் கற்றல் பணி, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது, ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவது, காலி பணியிடங்களை மாறுதல் மூலம் நிரப்புவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்கிடையே ஒரு கல்வி மாவட்ட அலுவலகத்தில் பணம் கொடுத்தால் எந்த வேலையும் நடத்தி முடிக்கலாம் என்ற நிலை அரங்கேறி வருகிறது. குறிப்பாக, கல்வி பணி சார்ந்து விண்ணப்பிக்க வருவோரிடம், குறிப்பிட்ட பணத்தை பெற்று, அதிகாரியிடம் ஒப்படைக்க சம்மந்தப்பட்ட கல்வி அலுவலகத்தில் ஊழியர்கள் தனி டீமாகவே செயல்படுகின்றனர்.
Read Also: இடமாறுதலை ஏற்க மறுத்த உஷா
விண்ணப்பதாரர்களோ வேலை முடிந்தால் சரி என்ற மனநிலையில், கேட்கின்ற பணத்தை கொடுத்துவிடுகின்றனர். ஒய்வுபெறும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு என்ஒசி சான்றிதழ் வழங்கவும், அதிகாரிகள் அடாவடியாக பணத்தை வசூலிக்கின்றனர். பணம் வராதவர்களுக்கு என்ஒசி சான்றிதழை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்காமல் இன்று போ நாளை வா என்று கூலாக பதிலளித்து இழுத்தடிக்கின்றனர். எதற்கெடுத்தாலும் பணம் கேட்பதால் கல்வி அலுவலகம் வசூல் மையமாக மாறி வருவது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பள்ளி கல்வி இயக்குனர் அறிவொளி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source Dinamalar