CRC பயிற்சி ஈடுசெய் விடுப்பு எடுக்க தகுதி உண்டா – ஆர்டிஐ பதில்
CRC பயிற்சி
கோவையை சேர்ந்த ஒருவர் தகவல் பெறும் உரிமை சட்டம் 2005ன் கீழ், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கல்வி, மாநில திட்ட இயக்ககத்தின் பொது தகவல் அலுவலர் மற்றும் நிர்வாக அலுவலர் பாபு விநாயகம் தகவல் ஒன்று கேட்கப்பட்டுள்ளது.
அதாவது கோரப்பட்ட தகவல் என்னவென்றால் – ஆசிரியர்களுக்கான சிஆர்சி பயிற்சி இந்த ஆண்டில் விடுமுறை நாளான 18.6.2022 அன்று நடைபெற்றது. எனவே பள்ளி கல்வித்துறை அரசாணை நிலை எண் 62 நாள் 13.03.2015ன்படி ஈடு செய் விடுப்பு எடுக்க தகுதி உண்டா? பணிந்து விளக்கம் கோரப்படுகிறது.
அதற்கு அளிக்கப்படும் தகவல் என்னவென்றால் – பள்ளி கல்வித்துறை அரசாணை நிலை எண் 62 நாள் 13.03.2015ன்படி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளில் பயிற்சி பெறும் நாட்கள் பணி நாட்களாக இருப்பின் பணி நாட்களாகவே கருதலாம். விடுமுறை நாட்களாக இருப்பின் 10 நாட்களுக்கு மிகாமல் ஈடுசெய் விடுப்பாக அனுமதிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
