சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் முக்கிய அறிவிப்பு
To Read More Education and Job News Join in Telegram Group CLICK HERE
சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் மாநில மையத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் மு.செல்வக்குமார், சு.ஜெயராஜராஜேஸ்வரன், பி.பிரெடெரிக் எங்கெல்ஸ் ஆகியார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளனர்.
அந்த கடிததத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது, தேர்தல் கால வாக்குறுதிகளில் பெரும்பான்மையான வாக்குறுதிகளை தமிழக முதல்வர் நிறைவேற்றியதை மனதார பாராட்டுகிறோம், வாழ்த்துகிறோம்.
புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கையை ஆறு இலட்சம் அரசு ஊழியர், ஆசிரியர்கள் குடும்பங்களில் தமிழக முதல்வரின் நடவடிக்கைகள் ஏற்படுத்தியுள்ளது.
Read This | பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்துக – திராவிட கட்சி அறிக்கை
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வோம் என்ற தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு ஊழியர் ஆசிரியர்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.
வருகின்ற 25.3.2022 அன்று சென்னையில் பேரணியாக சென்று தமிழக முதல்வர் அவர்களை சந்திந்து கையெழுத்து இயக்க படிவங்களை அளிக்க விரும்புகிறோம்.
எனவே, 25.03.2022 அன்று தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து கையெழுத்து இயக்க படிவங்களை வழங்கிட நேரம் ஒதுக்கி தருமாறு சிபிஎஸ் திட்டத்தில் பணிபுாியும் ஆறு லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கடிதத்தில் கூறியுள்ளனர்.