பயோ மெட்ரிக் பதிவு தமிழக ஆசிரியர்களுக்கு விலக்கு?
கொரோனா வைரஸால் 30 க்கும் மேற்பட்டோர் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, நேற்று (6ம் தேதி) மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு மார்ச் 31ம் தேதி வரை பயோ மெட்ரிக் பதிவு முறையில் இருந்து முழுமையாக விலக்கு அளித்து உத்தரவிட்டது. மாறாக, அவர் பழைய நடைமுறைப்படி பதிவேட்டில் தங்களது வருகைப்பதிவை பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளது. இதன் மூலம் கை ரேகை மூலம் கொரோனா வைரஸை தடுக்க முடியும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.
இதற்கிடையில், தமிழகத்தில் உள்ள ஒரு சில ஆசிரியர் சங்கங்களும் பயோ மெட்ரிக் பதிவு முறையில் இருந்து தமிழக ஆசிரியர்களுக்கு விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
இதுகுறித்து, கல்வித்துறையின் மூத்த அதிகாரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்கு போன்று, ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் பதிவில் இருந்து நிச்சயம் விலக்கு அளிக்கப்படும். இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.