நோய் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அரசு சார்பில் கொரோனா தடுப்பூசி (Covishield Vaccine) முன்கள பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பள்ளி கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், அரசாணையின்படி, இன்றைய தேதியில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், பள்ளி கல்வி இயக்குனர், மெட்ரிக் பள்ளி இயக்குனர், தொடக்க கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களின் செயல்முறைகளின் படி, Novel Corona Virus Infection நோய் மற்றும் பிற வைரஸ் நோய்கள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து வகை அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், வட்டார கல்வி அலுவலர்களும் தெரிவிக்கப்படுகிறது. சேலம் மாவட்ட ஆட்சி தலைவர் (வளர்ச்சி பிரிவு) அவர்களின் கடித்ததின்படி சேலம் மாவட்ட கல்வித்துறையின் கீழ் உள்ள அனைத்து அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வு அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், ஆசிாியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவது சார்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இக்கடிதத்தின்படி சேலம் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் உள்ள அனைத்து அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திகொள்ளுதல் சார்ந்து அதன் விவரங்களை மின்னஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும், இவ்வாறு சுற்றறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.