கடந்த ஒரு வாரமாக, மாவட்ட உயர் அதிகாரிகள் உத்தரவின்பேரில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கையெழுத்து இல்லாத ஒரு சுற்றறிக்கை பள்ளிகளுக்கு அனுப்பி, ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் ஒரு பெரும் பீதியை கிளப்பியது, ஒரு சிலர் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர், ஒரு சிலர் தடுப்பூசியை செலுத்தி கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் ஆசிரியர்கள் சங்கங்கள் தடுப்பூசி செலுத்த யாரையும் கட்டாயப்படுத்த கூடாது, விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த வேண்டும் என வரிசையாக கோரிக்கையை முழங்கிவந்தனர். மேலும், தேர்தல் ஆணையமும் சந்தேகத்தை தீர்க்கும் வகையில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தத்ல அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறுகையில், தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது, கட்டாயம் கிடையாது. அவர்கள் விருப்பப்பட்டால், முன்னுரிமை அடிப்படையில், கொரோனா தடுப்பூசி போடப்படும் என அவர் முன்னனி தமிழ் நாளிதழிக்கு பேட்டி அளித்துள்ளார். இதையடுத்து, ஆசிரியர்கள் மத்தியில் உள்ள மனக்குழப்பம் நிறைவுக்கு வந்துள்ளது.