You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

கணினி ஆய்வக உதவியாளர் பணி: போர்கொடி உயர்த்திய வேலையில்லா கணினி ஆசிரியர்

TN Dr Radhakrishnan award list pdf 2024

அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட உள்ள கணினி ஆய்வக உதவியாளர் பணியில் மாநில ஒருங்கிணைந்த கல்வி திட்டம் (சமக்கிர சிக்‌ஷா) ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக வேலையில்லா கணினி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

வேலையில்லா கணினி ஆசிரியர் சங்கத்தினர், ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதிஷை இன்று காலை நேரில் சந்தித்து முறையிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரள அரசு நிறுவனமான கெல்ட்ரான் மூலம் தமிழக அரசு பள்ளிகளில் கணினி ஆய்வகம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. கணினி ஆய்வக பணிகளை நிர்வகிக்கவும், எமிஸ் பணிகளை செய்யவும், இதே நிறுவனம் மூலம் தற்காலிக முறையில் மாதம் ரூ 15 ஆயிரம் சம்பளத்தில் சுமார் 8 ஆயிரம் கணினி ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, சமக்கிர சிக்‌ஷா எவ்வித முறையான அறிவிப்பு வெளியிடாமல், ஆன்லைன் மூலம ரகசியமாய் கணினி கல்வி பயின்றவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்டது. இது அப்பட்டமானது பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இல்லம் தேடி தன்னார்வலர்கள் மற்றும் கணினி ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த பலர் இத்தேர்வில் பங்கேற்றனர். இந்த நிலையில், முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இரண்டாம் கட்ட தேர்வு எழுத மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு நடந்த இரண்டாம் கட்ட தேர்வில் ஒரு சிலரை தவிர, தேர்வான பல கணினி ஆசிரியர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பங்கேற்ற தேர்வர்கள் தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை. இதனால் கடும் வேதனை அடைந்தனர். சில இடங்களில் இல்லம் தேடி தன்னார்வலா்களுக்கு மட்டுமே தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த வேலையில்லா கணினி ஆசிரியர்கள் சிகரம் சதிஷை சந்தித்து முறையிட உள்ளனர்.