தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோவை சார்பில் அரசு தேர்வுகள் இயக்ககத்திற்கு அனுப்பப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, கோவை மாவட்டம் முழுமைக்கும் விடைத்தாள் தைக்கும் பணி ஒரே பள்ளி மையத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால், ஆசிரியர்களுக்கான இருக்கை உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படவில்லை. மேலும், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்கு ஒரு மையமும், கோவை மாவட்டத்திற்கு ஒரு மையமும் என இரண்டு அமைத்து தர வேண்டும்.
Read Also: மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய அலுவலக உதவியாளர் கைதுவிடைத்தாள்களை தைக்கும் பணிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். விடைத்தாள் தையல் பணிக்கு உதவியாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை பயன்படுத்துவதை தவிர்த்து, அதற்கென தனி பணியாளா்களை நியமிக்க வேண்டும், இவ்வாறு அதில் தொிவிக்கப்பட்டுள்ளது.