ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டியில் கோவை காரமடை எஸ்ஆர்எஸ்ஐ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒரு தங்கம், ஒரு வெள்ளி பெற்று அசத்தியுள்ளனர்.
மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகளை நடத்தி ஊக்குவித்து வருகிறது.நடப்பாண்டிற்கான தேசிய அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் 37 மாணவர், மாணவியர்கள் ஜார்கண்ட் மாநிலத்தில் நடக்கும் தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டியில் பங்கேற்றனர்.