You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

சாதிய பாகுபாடு புகார்: கோவை மாணவன் தற்கொலை; ஆசிரியர் கைது

Coimbatore school student death caste discrimination teacher arrested

சாதிய பாகுபாடு புகார்: கோவை மாணவன் தற்கொலை; ஆசிரியர் கைது

 

பள்ளி மாணவன் அகிலன் 

கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் மேல்நிலை பள்ளியில்  அதே பகுதியை சேர்ந்த பட்டியலின வகுப்பை சேர்ந்த மாணவன் அகிலன் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். அவரது அப்பா மூணாரில் உள்ள ரிசாா்ட்டில் கூலி வேலை செய்து வருகிறார், அம்மா வீட்டு வேலை செய்து வருகிறார்.  

மாணவனின் தாயார் கவுசல்யா அக்டோபர் 21ம் தேதி (நேற்று) மதியம் வீட்டுக்கு சென்றபோது, அதிர்ச்சி காத்திருந்தது. அவரது மகன் அகிலன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ததை கண்டு அதிர்ந்தார். இதையடுத்து கவுசல்யா பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

பள்ளியில் சாதிய தீண்டாமை 

அந்த புகார் கடிதத்தில், தனது மகனுக்கு சாதிய ரீதியிலான தீண்டாமை, துன்புறுத்தல் நடைபெற்றுள்ளது. இதனால் விபரீத முடிவுக்கு தூண்டப்பட்டு, தனது மகன் வீட்டில் உயிரை மாய்த்துக்கொண்டார். குறிப்பாக, உடன் பயிலும் இரு மாணவர்கள், வகுப்பு ஆசிரியர் விஜயகுமாா் மற்றும் தலைமை ஆசிரியர் அருண் குமார் ஆகிய நான்குபேர்தான் காரணம் என புகாரில் தெரிவிக்கப்பட்டது. 

Read also: நல்லாசிரியர் விருது தேர்வில் பேரம்

காவல்துறையினர் வழக்குப்பதிவு 

அதன்படி போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில், பள்ளி வகுப்பறையில் சாதி பெயரையும் யாரெல்லாம் மாட்டு இறைச்சி சாப்பிடுவீா்கள் என ஆசிரியர் விஜயகுமார் கேட்டார். அப்போது மாளணவர்கள் இருவர் அகிலனை சாதிப்பெயரை சொல்லி துன்புறுத்தினர். இதுதொடர்பாக தலைமை ஆசிரியர் அருண்குமாரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர் தெரிவித்திருந்தனர். அதன்படி முதற்கட்ட விசாரணையில் காவல்துறையினர் அக்டோபர் 22ம் தேதி  (இன்று) ஆசிரியர் விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர். 

மாணவன் தந்தை பேட்டி

மாணவன் தந்தை அசோக்குமார் கூறும்போது, வகுப்பறையில் உதவித்தொகை கேட்கும்போது, மகனின் சாதி மற்றும் மாட்டு இறைச்சி சாப்பிடுவது குறித்து ஆசிரியர் கேட்டுள்ளார். இதில் மகன் அகிலன் மனமுடைந்தார். பள்ளியில் முறையிட்டபோது, அவர்கள் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இவ்விவகாரத்தில் மகனை துன்புறுத்திய அனைவரும் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் வலியுறுத்தி உள்ளார். 

கடும் கண்டனங்கள்

பள்ளியில் நடந்த இந்த சம்பவத்திற்கு அனைத்து தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் வரத்தொடங்கியுள்ளது. சமத்துவம் நிலவ வேண்டிய கல்வி நிலையங்களில் சாதிவெறி பிடித்த ஒரு சில ஆசிரியர்களால் மாணவர்கள் சாதிய தீண்டாமை சந்திப்பது வெட்கிக் தலைகுனிய வேண்டிய விஷயம் என தெரிவிக்கின்றனர். 

தற்கொலை எண்ணம் தீர்வல்ல… 

தற்கொலை எண்ணம் இருந்தால், உடனடியாக தமிழ்நாடு அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-ஐ தொடர்பு கொண்டு பேசலாம். இதேபோல், சிநேகா தொண்டு நிறுவனத்தை +91 44 2464 0050, +91 44 2464 0060 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது help@snehaindia.org என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவிகளை பெறலாம்.