Coimbatore PSG Hostel Free Admission 2023
பிஎஸ்ஜிஜி கன்யா குருகுலம் கல்வி நிறுவனங்கள், பிஎஸ்ஜி கெங்கா நாயுடு தர்ம ஸ்தாபனத்தால் நிறுவப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கல்வி நிறுவனங்களில் ஒரு ஆரம்ப பள்ளியும், மேல் நிலைப்பள்ளியும் பெண் குழந்தைகளுக்காக செயல்பட்டு வருகிறது. மேற்படி பள்ளிகளுடன் இணைந்த இலவச உணவு விடுதியில் தாய் அல்லது தந்தையை இழந்த பெண் குழந்தைகள், தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்பட்ட, பிற்பட்ட இனத்தை சார்்த ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு கீழ் உள்ள பெற்றோர் மற்றும் காப்பாளர்களிடம் இருந்து 4வது வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு முடிய பெண் குழந்ைதகள் இலவச உணவு விடுதியில் சேர்த்துகொள்ள விண்ணப்பங்கள் 15.5.2023க்குள் வரவேற்கப்படுகிறது.நல்ல இயற்கை சூழ்நிலையில் காற்றோட்டமும், விசாலமான இடவசதியும் கொண்ட இலவச விடுதியில் படிக்க ஆர்வமும், திறமையும் உள்ள ஏழை பெண் குழந்தைகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.