கோவை வேலை வாய்ப்பு செய்தி அரசு அலுவலகங்களில் தற்காலிக பணி – இளைஞர்களே அலர்ட்
கோவை வேலை வாய்ப்பு செய்தி
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு, கோவை மாவட்டத்தில் தேசிய சுகாதார குழுமத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் மூலம் துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகம் மற்றும் இணை இயக்குனர் மற்றும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகத்தில்
Data Entry Operator காலிப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளது.
இதுகுறித்த விண்ணப்ப படிவம் மற்றும் விரிவான விவரங்களை கோவை மாவட்ட இணையதள முகவரி http://coimbatore.nic.in லிருந்து பதிவிறக்கம் செய்யது கொள்ளலாம். மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பங்களுடன் பணிக்கு தேவையான அறிவிக்கப்பட்ட அனைத்து சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 25.7.2022 அன்று மாலை 5 மணிக்குள் பந்தய சாலையில் உள்ள துணை இயக்குனர் சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம்.
மேற்படி பணிக்களுக்கான நேர்முகத் தேர்வு வரும் ஆகஸ்ட் 5ம் தேதி காலை 10 மணியளவில் துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகத்தில் நடைபெறும் என்று
மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.