You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Coimbatore Job: கோவையில் வேலை வாய்ப்பு திருவிழா

Typing exam apply Tamil 2023

Coimbatore Job: கோவையில் வேலை வாய்ப்பு திருவிழா

Coimbatore Job

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் 10, +2 முதல் பொறியியல் பயின்ற பட்டதாரிகள் பங்கேற்று பயன் பெறுமாறு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வரும் ஆகஸ்டு 12ஆம் தேதி சிறப்பு தனியார் துறைகளில் பணியாற்றுவதற்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Also: TNPSC Group I Notification PDF 2022 | TNPSC Latest News

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: வரும் ஆகஸ்டு 12 யில் வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில், தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில், 10ம் வகுப்பு 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் என பட்டப்படிப்பு முடித்தவர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம்.

வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலமாக நடைபெறும் இந்த முகாமில், பங்கேற்பவர்கள் தங்களது சுய விவரம் மற்றும் கல்விச் சான்று நகலுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை பெறலாம் என்றும் இந்த முகாமில் கலந்து கொள்வதற்கு வயது வரம்பு மற்றும் கட்டணம் இல்லை.

மேலும், இம்முகாமில் தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு பணி நியமன ஆணை உடனே வழங்கப்படும் என்றும், பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இந்த முகாமில் பங்கேற்க விரும்பும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in மற்றும் www.ncagov.in என்ற வலைத்தள பக்கங்களில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.