Coimbatore Job Fair on August | கோவை வேலை வாய்ப்பு முகாம்
Coimbatore Job Fair on August
கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு, மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாம் கோவை மேட்டுப்பாளையம் சாலை ஜி.என் மில்ஸ் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி நடக்கிறது.
இதில் 250க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன, 20,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. மேலும் பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. கல்வித்தகுதியாக எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசி, பொறியியல் படிப்பு முடித்த பட்டதாரிகள் பங்கேற்கலாம் என் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக,வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க முன்பதிவு செய்வது அவசியம். cbe_pro என்ற டிவிட்டர் பக்கத்தில் வேலை வாய்ப்பு குறித்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் உள்ள க்யூர் கோடு ஸ்கேன் செய்து தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தொிவிக்கப்பட்டுள்ளது.