கோவை மதுக்கரை அருகே அரசு பள்ளி பெண் ஆசிரியையின் உடல் குப்பை போடும் பகுதியில் எரிந்த நிலையில் மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போலீசார் சடலத்தை கொலையா, வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் மதுக்கரை நாச்சிபாளையத்தை சேர்ந்தவர் பத்மா. இவர், வழுக்குப்பாறை அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று காலை பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு, அவர் பள்ளிக்கு செல்லவில்லை. மேலும், சக ஆசிரியர்கள் பத்மாவை தொடர்பு கொண்டபோது, அவர் அழைப்பை ஏற்கவில்லை என கூறப்படுகிறது.மேலும், அவர் நீண்ட நேரமாகியும் நேற்று மாலை வீடு திரும்பாததால், பள்ளியில் விசாரித்தபோது, பள்ளிக்கும் செல்லவில்லை என கூறப்படுகிறது. மேலும் குடும்பத்தினர், காவல்நிலையில் தகவல் தெரிவித்துவிட்டு, பத்மாவை தேடியுள்ளனர். இந்த நிலையில், நாச்சிபாளையம் அருகே குப்பை போடும் பகுதியில் சடலம் எரிந்த நிலையில் கிடந்ததை கண்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனை விசாரித்த போலீசார், உறவினர்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்டது பத்மாவின் உடல்தான் என போலீசார் உறுதி செய்தனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.