CoiCoimbatore Government BEd College | கோவை அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி சாம்பியன்
CCoimbatore Government BEd College
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் கோவை மாவட்ட அளவிலான விளையாட்டு மற்றும் கலை இலக்கிய போட்டிகள், கோவை பி.பி.ஜி கல்வியியல் கல்லூரியில் நடந்தது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் கோவை மாவட்ட அளவிலான விளையாட்டு மற்றும் கலை இலக்கிய போட்டிகள், கோவை பி.பி.ஜி கல்வியியல் கல்லூரியில் நடந்தது. இதில் கோவை அரசு மகளிர் கல்வியியல் கல்லுரி மாணவிகள் போட்டியில் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி அசத்தினர்
Read Also: அண்ணா சைக்கிள் போட்டி ரூ.5 ஆயிரம் முதல் பரிசு
இதில் கல்லூரி மாணவி அ.தேன்மொழி குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பெற்றார். 400 மீட்டர் ஓட்ட போட்டியில் து.மதுராதேவி இரண்டாவது இடமும், கா.அனுசுயா மூன்றாவது இடமும் பிடித்தனர். அதேபோன்று, அனுசுயா 200 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாவது இடம் பிடித்தார். மேலும் ஜே.கவிதா குண்டு எறிதல் போட்டியில் மூன்றாவது இடம் பிடித்தார். இதுதவிர, தேன்மொழி, கா.அனுசுயா, மதுராதேவி சி.அனுசுயா ஆகியோர் 4*100 மீ தொடர் ஓட்டத்தில் முதலிடம் பெற்று மகளிர் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.
கோவை மாவட்ட அளவிலான கட்டுரை போட்டியில் மாணவி பா.பவித்ராதேவி முதலிடமும், ந.காயத்திரி மூன்றாவது இடமும், வ.மா.மதிலா பேச்சு போட்டியில் மூன்றாவது இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி முதல்வர் பால்கிரேஸ், உடற்கல்வி இயக்குனர் லட்சுமி பிரபா மற்றும் பேராசிரியர் ஆகியோர் வாழ்த்தினர்.