Coimbatore Government Arts College Principal | கோவை அரசு கல்லூரி முதல்வர்
Coimbatore Government Arts College Principal
கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி சற்று முன் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, அதன்படி, கோவை
அரசு கலை கல்லூரியின் தற்போதைய முதல்வர் வெ.கலைச்செல்வி, கோவை மண்டல கல்லூரி கல்வியின் இணை இயக்குனராக இடம் மாற்றம் செய்யப்பட்டார். அதேபோன்று, கோவை மண்டல கல்லூரி கல்வியின் இணை இயக்குனராக பணியாற்றி வந்த ரா.உலகி, கோவை அரசு கலை கல்லூாியின் முதல்வராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, கலை செல்வி கோவை மண்டல கல்லூரி கல்வியின் இணை இயக்குனராக முன்பு பணியாற்றி வந்த நிலையில், அவர் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். தற்போது, மீண்டும் அதே பணியிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Read Also: ஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியருக்கு தர்ம அடி
ஏற்கனவே பேராசிரியர்கள் உள் அரசியல் காரணமாக, அவ்வப்போது கல்லூரி கல்வி இயக்குனரகம் இதுபோன்று இடமாற்றம் விளையாட்டு விளையாடிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதேபோன்று, ஓரத்தநாடு அரசு கல்லூரி முதல்வர் எஸ் பானுமதி, நாமக்கல் ராசிபுரத்தில் உள்ள திருவள்ளுர் அரசு கலைக்கல்லூரிக்கும், பேராவூரணி கல்லூரி முதல்வர் தனராஜன், கும்பகோணம் அரசு கல்லூரிக்கும், புதுக்கோட்டை கல்லூரி முதல்வர் நாகராஜன், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சேதுபதி அரசு கல்லூரிக்கும், சாத்தான்குளம் அரசு கல்லூரி முதல்வர், சின்னதாய், தென்காசியில் உள்ள காமராஜர் அரசு கல்லூரிக்கும், காரம்பக்குடி கல்லூரி முதல்வர் கோவிந்தராஜூ, கிருஷ்ணகிரி கிரேடு – 1 கல்லூரிக்கும், திட்டமலை கல்லூரி முதல்வர் சீனிவாசன், வாலாஜபேட்டை அரசு மகளிர் கல்லுரிக்கும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கிரேடு 2 கல்லூரியில் இருந்து கிரேடு 1 கல்லூரிக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.