Coimbatore Government Arts College Counselling 2022 | கோவை அரசு கலை கல்லூரி கலந்தாய்வு
Coimbatore Government Arts College Counselling 2022
கோவை அரசு கலை கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவில் 1,437 இடங்கள் உள்ளன. விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 29ம் தேதி முதல் ஜூலை 27ம் தேதி வரை நடந்தது. நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையில், கிட்டதட்ட 25 ஆயிரம் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக மாணவர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களுக்கு இடம் கிடைப்பதில் கடும் போட்டியாக இருக்கும். இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: MBA MCA ADMISSION 2022
Coimbatore Government Arts College Counselling 2022
- ஆகஸ்டு 5ம் தேதி – சிறப்பு பிரிவில் (விளையாட்டு, என்சிசி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுதிறனாளி, ராணுவத்தினர் குழந்தைகள்) கலந்தாய்வு நடக்கிறது.
- ஆகஸ்டு 8ம் தேதி - வணிகவியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம்
- ஆகஸ்டு 10ம் தேதி – வணிகவியல் (சிஏ), கணிதம், இயற்பியல், வேதியியல்
- ஆகஸ்டு 11ம் தேதி – வணிகவியல் (இன்டா்நேஷனல் பிசினஸ்), தாவரவியல், விலங்கியல், புவியியல்
- ஆகஸ்டு 12ம் தேதி - தொழில் மேலாண்மை, மண்ணியல், உளவியல், புள்ளியியல்,
- ஆகஸ்டு 13ம் தேதி - அரசியல் அறிவியல், பாதுகாப்பு இயல்,
- ஆகஸ்டு 16ம் தேதி – பொது நிர்வாகம், வரலாறு
- ஆகஸ்டு 17ம் தேதி – பொருளாதாரவியல், சுற்றுலா
- ஆகஸ்டு 18ம் தேதி – தமிழ், ஆங்கிலம்