திருப்பூர் பச்சையப்பன் நகர் முதல் வீதியைச் சேர்ந்தவர் சத்தியநாராயணன் (21), கோவை காளப்பட்டியில் உள்ள பிரபல கலை அறிவியல் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்துவந்தார். நேற்று முன்தினம் கல்லூரியில், அவரது சக வகுப்பு மாணவர்கள், பிராங்க் என்ற பெயரில், சத்தியநாராயணனை கிண்டல் செய்து, அடித்து வீடியோ எடுத்துள்ளனர்.
இதில் மனமுடைந்த சத்தியநாராயணன், தன் வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் மாவட்டம் நல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர். இந்த நிலையில், மாணவனை பிராங்க் செய்து வீடியோ எடுத்து சக மாணவர்கள் மூவரையும், கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. இந்த நிலையில் இந்த விவகாரத்தை மூடி மறைக்காமல், அந்த மூன்று பேரையும் கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்