Coimbatore CEO Sumathi | புதிய முதன்மை கல்வி அதிகாரி பொறுப்பேற்பு
Coimbatore CEO Sumathi
கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பணியாற்றி வந்தவர் பூபதி. இவர் சென்னை தொடக்க கல்வி இயக்கக துணை இயக்குனராக (நிர்வாகம்) சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக சென்னை ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குனராக பணியாற்றி வந்த சுமதி நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் கோவை டவுன்ஹாலில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
கோயம்புத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட திருமதி எல்.சுமதி அவர்களை பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.