கோவை முதன்மை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தஞ்சாவூருக்கு இடமாற்றம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக கடந்தாண்டு பிப்ரவரி மாதம் உஷா அவர்கள் நியமிக்கப்பட்டார். இவர் பணியில் சேர்ந்தது முதல் பல்வேறு குற்றச்சாட்டு எழுந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக தனியார் பள்ளிகளிடம் அங்கீகாரம் புதுப்பித்தல் உள்ளிட்டவை பணம் வசூலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த டிசம்பா் மாதம் லஞ்ச ஓழிப்புதுறை போலீசார் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலும், ரேஸ்கோர்ஸில் உள்ள அவரது வீட்டிலும் அதிரடி ரெய்டு நடத்தினர்.
இந்த சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாய் பணம் அவரிடம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் வாங்கிய புகார் தொடர்பாக அங்கீகாரம் பெற்ற புலனாய்வு அமைப்பின் பரிந்துரையின் அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி ராமகிருஷ்ணன் கோவை மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் உடனடியாக தங்களின் பணி பொறுப்பை ஏற்க வேண்டும் என அரசு முதன்மை செயலாளர் தீரஜ்குமார் தெரிவித்துள்ளார்.
(நாளிதழ் செய்தி அடிப்படையிலானது)