You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

தொலைவில் தேர்வு பணி ஒதுக்கீடு ஆசிரியர்கள் மன உளைச்சல்

Coimbatore CEO Balamurali

பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில், அருகே இருக்கும் தேர்வு மைங்களுக்கு அனுமதிக்காமல், பல கி.மீ தொலைவுக்கு, வேண்டுமென்ற அலைக்கழிக்கப்படுவதாக ஆசிரியர்கள் புலம்புகின்றனர். 

தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு நடந்துவருகிறது. கோவை மாவட்டத்தில் 128 மையங்களில் 34,958 மாணவர்களும், 615 பேர் தனித்தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர். கோவை மாவட்டத்தில் அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை என தேர்வு பணியில் சுமார் 2800 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே, அறை கண்காணிப்பாளர்களுக்கான பட்டியல் முன்னதாகவே வெளியிடவில்லை எனக்கூறி, முதன்மை கல்வி அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், தேர்வு பணி வெகு தொலைவில் ஒதுக்கீடு செய்ததாக முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி மீது குற்றச்சாட்டு வைத்துள்ளனர். 

கோவை முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக பொறுப்பாளர் முகமது காஜா முகைதீன் அவர் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், தேர்வு பணியில் சுமார் 75சதவீதம் பெண்கள் ஆவார். இவர்களில் 200 பேர் வரை 30 கி.மீ தொலைவில் உள்ள தேர்வு மையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்கிரைப் பணிக்கு பொள்ளாச்சி மையத்துக்கு காரமடையில் இருந்து ஒருவர் வருகிறார். 

வாகனம் ஓட்டத்தெரிந்தவர்கள் உயிரை கையில் பிடித்து காலை 8.45 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வருகின்றனர். முன்பு அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தில், 15 கி.மீ தூரத்திற்குள் ஆசிரியர்கள் தேர்வு பணிக்கு அமா்த்தப்படுவர். தமிழகம் முழுவதும் இன்றும் இதே நடைமுறைதான். 

ஆனால், கோவையில் மட்டுமு் குலுக்கல் முறையில் தேர்வு நடக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். பல தேர்வு மையங்களில் தொலைவில் இருந்து, தேர்வு பணிக்கு வந்த ஆசிரியர்களுக்கு பணி எதுவும் ஒதுக்கப்படாததால் மீண்டும் அவர் பள்ளிக்கு திரும்ப வேண்டிய அவலநிலை இருந்தது. கல்வி அதிகாரிகள் இதற்கு தீர்வு காண வேண்டும், என்றார்.