செய்திக்குழு, நேரம் 8.25am
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஒன்றியம் சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ வீட்டில் தனியாக இருந்த போது, முருகன், கலியபெருமாள் ஆகியோர் மாணவியின் கைகளை கயிற்றால் கட்டி பெட்ரோல் ஊற்றி கொளுத்தி கொலை செய்த சம்பவம நாடு முழுவதும் பெரும் பரபப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கோர சம்பவத்திற்கு பல்வேறு தரப்புகள், மாணவ கூட்டமைப்புகள், அரசியல் கட்சியினர், கல்வி சங்கங்கள், முதல்வர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பத்தாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ வீட்டில் தனியாக இருந்த போது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ததை, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வண்மையாக கண்டிக்கிறது. இச்சம்பவத்தில் ஈடுப்பட்ட கயவர்களுக்கு அதிக பட்ச தண்டனையான தூக்கு தண்டனை அரசு பெற்று தரவேண்டும், இது போன்ற சம்பவம் இனி எந்த ஒரு சிறுவருக்கும் ஏற்படாத வகையில் இந்த தண்டனை முன் உதாரணமாக இருக்கவேண்டுமெனவும் குடும்பத்திற்கு நிதியை அதிகப்படுத்தி அளிக்கவேண்டும் என தமிழக அரசை அந்த கூட்டமைப்பு கேட்டு கொண்டுள்ளது. அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் தமிழ்நாடு மாநிலக்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.