தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு கட்டாயம் நடக்கும் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தமிழகத்தில் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: தமிழகத்தில் கட்டாயம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும். ஊரடங்கிற்கு பிறகு, 10ம் வகுப்பு தேர்வுகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு அட்டவணை மே 3ம் தேதிக்கு பிறகு முடிவு செய்யப்படும். ஒவ்வொரு தேர்வுக்கு மத்தியிலும் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.