ஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறுமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
இதுத் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு அமலிலுள்ள காரணத்தினால் தடைப்பட்ட 10 ஆம் வகுப்பு தேர்வுகள் காலதாமதமாகின. இந்நிலையில் வருகின்ற ஜூன் 1 முதல் 12 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறுமென அமைச்சர் அறிவித்தார். இதேபோல் விடைத்தாள் திருத்தும் பணி மே 27ம் தேதி முதல் நடக்கிது. பள்ளி திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படவில்லை. ப்ளஸ் 1 தேர்வு ஜுன் 4ம் தேதி நடக்கிறது.