தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகே பொம்மையாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து. ஆடு மேய்க்கும் தொழிலாளியான, இவரது மகன் மகேந்திரன் (12). சிவஞானபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்துவந்தார். பனிமய மாதா ஆலய திருவிழா முன்னிட்டு, கடந்த 5ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டதால், நேற்று பள்ளிகள் இயங்கின. பள்ளிக்கு வந்த மகேந்திரன், இடைவேளையின் போது, சக மாணவர்களோடு விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்து உயிாிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.