நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் ரோஸ்மேரி எனற தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவன் இன்று காலை தனது புத்தக பையில் கூர்மையான அரிவாளை கொண்டு வந்தார்.
பள்ளிக்கு வந்த மாணவன், இன்னொரு எட்டாம் வகுப்பு மாணவனை அாிவாளை கொண்டு தலை, கழுத்து, தோள்பட்டை ஆகிய இடங்களில் பலமாக வெட்டியுள்ளார். இதனை கண்ட ஆசிரியர் ஒருவர் தடுக்க வந்துள்ளார், அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதனால், சக மாணவர்கள் அங்கிருந்து தெறித்து ஒடினர். உடனடியாக பள்ளி நிர்வாகம், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார் அாிவாள் கொண்டு வந்த மாணவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.மேலும் அரிவாள் வெட்டு வாங்கி மாணவன், ஆசிரியர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிாிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பேனா, பென்சில் கொடுக்கல் வாங்கல் மாணவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது எனக்கூறப்படுகிறது.