You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்

TN class 8 hall ticket download 2025

அரசு தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 18.08.2025 முதல் 22.08.2025 வரை நடைபெறவுள்ள தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுத தேர்வுத் துறையின் சேவை மையங்களில் (Service Centre) ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 11.08.2025 பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்யும் முறை

மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் HALL TICKET-என்ற வாசகத்தை CLICK  செய்து  "ESLC AUGUST 2025 EXAMINATION - CANDIDATE HALL TICKET DOWNLOAD" என்ற தலைப்பின்கீழ் உள்ள "DOWNLOAD HALL TICKET என்ற வாசகத்தினை CLICK செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியை (Date of birth) பதிவு செய்தால் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு திரையில் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

உரிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். மேற்காண் தேர்விற்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு குறித்து தனிப்பட்ட முறையில் அறிவிப்பு ஏதும் அனுப்ப இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.