சேலம் அடுத்த அயோத்தியாபட்டணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் பள்ளத்தானூரை சேர்ந்த 17வயது மாணவன், பிளஸ் 2 படித்து வருகிறான். நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்த மாணவனை, பெண் உதவி தலைமை ஆசிரியர் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால், மாணவன் அன்று மாலை கூட்டாத்துபட்டி பகுதியில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தான். அப்பகுதியினர் மாணவனை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றர். சம்பவம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் கபீருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்போில், சம்மந்தப்பட்ட உதவி தலைமை ஆசிரியர் மீது விசாரணை நடத்த மாவட்ட கல்வி அலுவலர் நரசிம்மனுக்கு உத்தரவிட்டார். கல்வி அலுவலர் விசாரணை நடத்தியுள்ளார், மேலும் உதவி தலைமை ஆசிாியர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.