உயர் கல்வி சேர்க்கைக்கு 11ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற பரிந்துரைகளோடு 500 பக்கங்களில் மாநில கல்விக்கொள்கை தயராகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கல்லூரி சேர்க்கையின்போது, 12ஆம் வகுப்பு மதிப்பெண் மட்டுமின்றி, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் இரண்டையும் கணக்கிட்டு, அதன் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்தப்பட வேண்டும் என மாநில கல்வி கொள்கை உருவாக்கக்குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 500 பக்கங்களில் உருவாகியுள்ள மாநில கல்விக்கொள்கையில் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் மாநில கல்விக்கொள்கை உருவாக்கக்குழு உருவாக்கப்பட்டது. தற்போது இந்த குழு வரைவு அறிக்கையை தயார் செய்து மூன்று மாதங்கள் ஆகின்றன. தற்போது அதன் நிலையை குறித்து தமிழக அரசு தெரிவிக்கவில்லை.News sources: Thanthi Tv