Chinnavelampatti government school | சின்னவேலம்பட்டி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
Chinnavelampatti government school
சேலம் அருகே மலைகிராம துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் அயோத்திபட்டினம் வட்டாரத்திற்கு உட்பட்ட சின்னவேலம்பட்டி மலைகிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சேலத்தை சேர்ந்த பாரதி தலைமை ஆசிரியராகவும், ராஜம் இடைநிலை ஆசிரியராகவும் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிஇஒ முருகன் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது பள்ளியில் ஆசிரியர்கள் யாரும் இல்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷிற்கு, சிஇஒ முருகன் பரிந்துரைத்தார்.
இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்த சந்தோஷ் பள்ளி தலைமை ஆசிரியர் பாரதி மற்றும் ஆசிரியர் ராஜம் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.