மாணவனுக்கு பிரம்படி ஆசிரியர் சஸ்பெண்ட்
திருப்பூர் பாப்பெண்ணன் நகரை சேர்ந்த 17வயது மாணவர் திருப்பூர் கொங்கு மெயின்ரோட்டில் உள்ள சின்னச்சாமி அம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 11ம் தேதி அன்று கணக்கு ஆசிரியரான செந்தில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் பிரம்பால் மாணவனை அடித்ததாக கூறப்படுகிறது. வலியால் அவதியடைந்த மாணவன், வீட்டுக்கு திரும்பிய பின், பள்ளியில் நடந்ததை கூறி, பெற்றோரிடம் அழுதுள்ளான்.
இதனால், அதிருப்தி அடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். திருப்பூர் வடக்கு போலீசார் பள்ளிக்கு வந்து, விசாரணை நடத்தினர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் செந்திலை பணியிடை நீக்கம் செய்தது. பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் தற்காலிகமாக செந்தில் ஆசிரியராக நடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் இணைந்து செந்திலை பணியிடை நீக்கம் செய்தனர்.