மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட பிறப்பு இறப்பு பதிவாளர் ம.கண்ணன் கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, குழந்தையின் பெயர் பதிவு செய்யாமல் பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளில், குழந்தையின் பெயரை பதிவு செய்து பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற 31.12.2024 வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த காலஅவகாசம் இதற்கு மேல் நீட்டிக்கப்படமாட்டாது எனவும் ெதிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தங்களது நிர்வாக கட்டிப்பாட்டின் கீழ் இங்கிவரும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு வருகைதரும் குழந்தைகளின் பெற்றோருக்கு மேற்படி தகவல் தொிவித்து, தங்களத குழந்தைகளுக்கு பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள தக்க வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தமாறும், இதுகுறித்த அறிவிப்பானை தகவல் பலகையில் பொதுமக்கள் பார்வையில் படுமாறு வைக்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி மையப்பணியாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.