You are at the right place to read the latest education news today in
Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on
our website - TN Education Info.
Girl Child Protection Scheme பெண் குழந்தையை கல்வி உறுதி செய்யும் வகையில் முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் 1992ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
Girl Child Protection Scheme Aim
பெண் சிசுக்கொலையை ஒழித்திடவும் ஆண் குழந்தைகளை விரும்பும் போக்கை மட்டுப்படுத்திடவும், குடும்ப கட்டுப்பாட்டை ஊக்கப்படுத்திடவும் அரசு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்துவதன் மூலம் பெண் குழந்தைகளின் நலனை பாதுகாக்கிறது. பெண் குழந்தைகளின் கல்வியை உறுதிசெய்திடவும் மற்றும் அவர்களின் உரிமைகளை காத்திடவும் அரசால் அக்குழந்தைகளின் பெயரில் நேரடியாக வைப்பு நிதி முதலீடு செய்து உதவிபுரியும் வகையில், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் 1992ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளின் பெயரில் நிலையான வைப்புத்தொகை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் (Tamil Nadu Power Finance and Infrastructure Development Corporation Limited) முதலீடு செய்யப்படுகிறது. இந்த வைப்புத்தொகையின் ரசீது நகல் பெண் குழந்தையின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. பெண் குழந்தையின் 18 வயது நிறைவடைந்ததும், திரண்ட வட்டிவிகிதத்துடன் கூடிய வைப்புத்தொகையின் முதிர்வு தொகையாக பயனாளிக்கு உயர்கல்வி பயில வழங்கப்படுகிறது.
Girl Child Protection Scheme Importance
வறுமை நிறைந்த குடும்பங்களில் பெண் குழந்தைகள் பொருளாதார சுமையாக தோன்றுவது மட்டுமின்றி அவர்களுக்கு கல்வி கட்டாயமில்லை என கருதுவதோடு அவர்களது கருத்துகளும் மதிக்கப்படுவதில்லை. கல்வியறிவு பெற்ற அதிகாரம் நிரம்பிய பெண் குழந்தைகள் இத்தகைய சமுதாயத்தில் மனமாற்றத்தை ஏற்படுத்தும் கருவிகளாக பார்க்கப்படுகின்றனர். பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிப்பதில் கல்வி முக்கிய பங்காற்றுகிறது. கல்வி பெண்களின் திருமண வயதை அதிகரிப்பதற்கு உதவுவதோடு மட்டுமின்றி அவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதிப்படுத்துகிறது. நன்கு படித்த பெண்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் பஙகேற்கிறாா்கள்.
READ ALSO :தொட்டில் குழந்தை திட்டம்: Why Kids Love TN Cradle Baby Scheme
Girl Child Protection Scheme Future Aim
பெண் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாத்தல், சமூக மற்றும் நிதிநிலையில், அதிகாரத்தினை வழங்குதல்
பெண் குழந்தைகள் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு வரை கல்வி பெறுவதை உறுதி செய்தல் பின் உயர் கல்வி பெறவும் ஊக்குவித்தல்
இரண்டு பெண் குழந்தைகளுடன் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ள பெற்றோர்களை ஊக்குவித்தல்
பெண் குழந்தைகளை அதிகாரம் அளிக்கும் திறன்களை மேம்படுத்த குடும்பத்தின் பங்களிப்பை உறுதி செய்தல்
Girl Child Protection Scheme 1
பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் முதலாவது திட்டத்தில் பெற்றோர் ஒரு பெண் குழந்தை வைத்திருந்தால் ஆரம்ப வைப்புத்தொகையாக ரூ.50,000 வழங்கப்படுகிறது.
GirlChild Protection Scheme 1 Eligible
குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை/ இரு பெண் குழந்தை மட்டும் இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக்கூடாது. எதிர்காலத்தில் ஆண் குழந்தையை தத்தெடுக்க கூடாது.
பெற்றோரில் ஒருவர் 35 வயதிற்குள் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும்போது குழந்தைகளின் பெற்றோர் தமிழ்நாட்டில் 10 ஆண்டுகள் தொடர்ந்து வசிப்பவராக இருக்க வேண்டும்
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.
திட்டம் 1ல் குழந்தையின் 3 வயது முடிவதற்குள் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்க வேண்டும்.
Girl Child Protection Scheme 2
பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் இரண்டாவதில் பெற்றோர் இரண்டு பெண் குழந்தை வைத்திருந்தால் ஆரம்ப வைப்புத்தொகையாக ரூ.25,000 வழங்கப்படுகிறது.
Girl Child Protection Scheme 2 Eligible
குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை/ இரு பெண் குழந்தை மட்டும் இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக்கூடாது. எதிர்காலத்தில் ஆண் குழந்தையை தத்தெடுக்க கூடாது.
பெற்றோரில் ஒருவர் 35 வயதிற்குள் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும்போது குழந்தைகளின் பெற்றோர் தமிழ்நாட்டில் 10 ஆண்டுகள் தொடர்ந்து வசிப்பவராக இருக்க வேண்டும்
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.
திட்டம் 2ல் இரண்டாவது குழந்தையின் 3 வயதுக்குள் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்க வேண்டும்.
Girl Child Protection Scheme Eligibility
S.NO
Girl Child Protection Scheme
Eligibility
1
Scheme - 1
Deposit Amount - Rs 50,000
2
Scheme - 2
Deposit Amount - Rs 25,000
3
Documents
Income, Nativity, Community, No Male Child, Girl Children Birth Certificate, Sterilization, Ration, Aadhaar, Marriage, Family Photo, Age Certificate and TC Mother and Father
4
Annul Income
Rs 75000 per annul
5
Applying Duration
Before Three Years since child birth
6
Applying Office
Block Development Officer
7
Amount Withdrawal
After 18 years
8
Renewal Period
Every Five Year once After Applying
9
Deposit Investment
Tamil Nadu Power Finance and Infrastructure Development Corporation Limited
How To Apply Girl Child Protection Scheme
குழந்தை பேறுக்கு பின், பெற்றோர் தங்களது குழந்தையின் மூன்று வயதிற்குள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தாங்கள் வசித்து வரும் Block Development Office வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அங்குள்ள அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.
வருமான சான்றிழ், ஆண் குழந்தை இல்லை என்ற சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், பெண் குழந்தை பிறப்பு சான்றிதழ், கருத்தடை சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் கார்டு, திருமண சான்றிதழ் இல்லாதவர்கள் தாசில்தார் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
பெண் குழந்தை பிறப்பு சான்றிதழ், கருத்தடை சான்றிதழ் மருத்துவ முகாம்களில் பெறலாம்.
திருமண சான்றிதழ் துணை பதிவாளர் அலுவலகத்தில் முறையாக விண்ணப்பித்து பெறலாம்.
Girl ChildProtection Scheme Renewal
இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பிறகு, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தொகை வைப்பீடு செய்யப்பட்டதற்கான அடையாள அட்டை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு, குழந்தையின் அம்மா வங்கி கணக்கு பயன்படுத்தப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் அரசு முதலீடு செய்த பிறகு தாய்மார்கள், ஐந்து வருடங்கள் ஒரு முறை வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று புதுப்பிக்க வேண்டும்.
ஒரு குழந்தைக்கு இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தால், 18 வருடம் முடிவுக்கு பின், தாய்மாா்கள் ரூ.3 லட்சம் பெறுவார்கள்.
இரண்டு குழந்தைகளுக்கு விண்ணப்பித்திருந்தால், ஒரு குழந்தைக்கு தலா ரூ.1.50 லட்சம் பெறுவார்கள்.
Girl Child Protection Scheme Benefit
இத்திட்டத்தின் கீழ் ஜூலை 2021 வரை, 10,15,975 பெண் குழந்தைகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1628.97 கோடி தொகை வைப்பீடு செய்யப்பட்டுள்ளது. 2020-2021ஆம் நிதியாண்டில் இத்திட்டத்தின்கீழ் 29,344 பெண் குழந்தைகள் பதிவு செய்யப்பட்டு ரூ.74.32 கோடி தொகை வைப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 2021ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின்மூலம் 26,561 பெண் குழந்தைகளுக்கு ரூ.76.44 கோடி முதிர்வு தொகை வழங்கப்பட்டுள்ளது. 2021-22ஆம் ஆண்டில் ஜூலை 2021 வரை 9,379 பெண் குழந்தைகளுக்கு ரூ.30.88 கோடி முதிர்வுதொகை வழங்கப்பட்டுள்ளது.