சென்னை : கொரோனா பரவல் காரணமாக, 11 மாவட்டம் நீங்கலாக, பிற மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.
மேலும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் அதிகரிப்பதாக செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கிறது. இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சில தலைமை ஆசிரியர்கள் காலை நேரங்களில் உரிய நேரத்தில் பள்ளிக்கு வருவதில்லை என்று புகார் எழுந்தது. மேலும், மாணவர் சேர்க்கை பணியிலும் தொய்வு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து, ராணிப்பேட்டை முதன்மை கல்வி அலுவலர் தலைமையாசிரியர்கள் காலை 9 மணி முதல் 9.15 மணிக்குள் பள்ளிக்கு வர வேண்டும் என சுற்றறிக்கை மூலம் தெரிவித்தார். மேலும், பள்ளிக்கு உரிய நேரத்தில் வருகை புரியாத பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.