Chief Educational Officer Usha | இடமாறுதலை ஏற்க மறுத்த உஷா
Chief Educational Officer Usha
பள்ளி கல்வித்துறையில் 10 நாட்களான நீடித்த சிஇஒ இடமாறுதல் பிரச்னையில், இறுதி தீர்வு காணப்பட்டுள்ளது. ராணிப்பேட்டையில் இருந்து திருப்பூர் செல்ல மறுத்த பெண் அதிகாரி, அங்கேயே தொடர அனுமதிக்கப்பட்டுள்ளது.
முதன்மை கல்வி அலுவலர்களான 6 சிஇஓகளுக்கு இடமாறுதல் வழங்கி, பள்ளி கல்வித்துறை செயலர் காகர்லா உஷா கடந்த 11ம் தேதி உத்தரவிட்டார். அதன்படி, அவர்கள் புதிய இடங்களில் சேர, பணியாற்றிய இடங்களில் இருந்து, பணி விடுப்பு உத்தரவு பெற்றனர்.
கோவை சிஇஒ சுமதிக்கு, ராணிப்பேட்டைக்கு மாறுதல் அளிக்கப்பட்டது. அவர்களுக்கு கோவை மாவட்ட கல்வி அலுவலர்கள், ஆசிரியா்கள் பிரிவு உபசார நிகழ்ச்சி நடத்தி வழியனுப்பினார். அவரும் நிகழ்ச்சியில் பாடல் பாடி விடை பெற்றார். அந்த சூட்டோடு ராணிப்பேட்டை சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு பணியாற்றும் சிஇஒ உஷா, புதிய பணியிடமான திருப்பூருக்கு செல்ல மறுத்துவிட்டார். திருப்பூர் சிஇஒ பாலமுரளியும் தன் புதிய பணியிடமான கோவைக்கு மாறுவதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் திருப்பூரிலேயே இருந்தார்.
Read Also: முதன்மை கல்வி அலுவலர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு
இதன் காரணமாக கோவை மாவட்டத்துக்கு 10 நாட்களாக சிஇஒ இல்லாமல், இந்த இடம் காலியாக இருந்தது. இன்னொரு புறமும், கோவையில் இருந்து ராணிப்பேட்டை வந்த சுமதி, அந்த மாவட்டத்தில் பணியில் சேர முடியுமா, முடியாதா என்பது தெரியாமல் தவித்தார். இந்த விவகாரம் கடந்த 10 நாட்களாக நீடித்ததை அடுத்து, பள்ளி கல்வித்துறை செயலர் காகா்லா உஷா நேற்று இரவு புதிய உத்தரவை பிறப்பித்தார். அதன்படி 10 நாட்களாக இடமின்றி தவித்த சுமதி, கரூர் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றும் கீதா திருப்பூருக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஆனால், இடமாற்ற உத்தரவை ஏற்க மறுத்த உஷா, ராணிப்பேட்டையிலேயே தொடர்கிறார். இவர் 2022ல் கோவை மாவட்டத்தில் பணியாற்றியபோது, அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துைற போலீசார் சோதனை நடத்தினார். அதன்பின் அவர் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த பிரச்னையால் அவர் மீ்ண்டும் கொங்கு மண்டலத்துக்கு மாறவிரும்பவில்லை என கூறப்படுகிறது.